"காதல் கோட்டை" படத்தின் 25 -ம் ஆண்டு நிறைவை கொண்டாடிய படக்குழு : விழாவில் அஜித் மிஸ்ஸிங் !
அகத்தியனின் இயக்கத்தில் வந்து பெரும் வெற்றி பெற்ற காதல் கோட்டை திரைப்படத்தின் 25 ஆண்டு நிறைவை படக்குழுவினர் கேக் வெட்டிக் கொண்டாடினர். கடந்த 1996ஆம் ஆண்டு இதே நாளில் அஜித் - தேவயானி நடிப்பில் வெளியான காதல் கோட்டை படம், “பார்க்காமலே காதல்” என்ற புதுமையான கருவைக் கொண்டிருந்தது.
இசையமைப்பாளர் தேவாவின் இசையில் பாடல்கள் அனைத்தும் வெற்றி வாகை சூட, படத்துக்கு தேசிய விருதும் கிடைத்தது. படம் வெளிவந்து இன்றுடன் 25 ஆண்டுகள் நிறைவடைவதால், படக்குழுவினர் அதனை கேக் வெட்டிக் கொண்டாடி, தங்களது பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். ஆனால் விழாவில் படத்தின் கதாநாயகன் அஜித் மற்றும் மற்றொரு நாயகி ஹீரா பங்கேற்கவில்லை.
Comments